இந்த பிரச்சனை இருக்கா ? அப்போ தவறியும் கொய்யா பழத்தை சாப்பிடாதீர்கள்
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
வெப்ப மண்டல நாடுகளை பொருத்த மட்டில் மிகவும் மலிவான விலையிலும் இலகுவிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்று கொய்யா.
கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை, பழங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது
கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது.வயிறு உப்பச பிரச்சினையுள்ளவர்கள் அதனை சாப்பிடுவதால் இன்னும் பாதிப்பை அதிகரிக்கும்.
வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், உப்பசம் உள்ளவர்களின் உடல் வைட்டமின் சி யை உறிஞ்சுவதற்கு சிரமப்படும்.
இர்ரிட்டபில் பௌல் சிண்ட்ரோம் என்ற குடல் எரிச்சல் நோய் இருந்தால், நீங்கள் கொய்யா சாப்பிடுவதைத் தவிர்க்க அல்லது குறைக்க வேண்டும்.
நார்ச்சத்து அதிகமாக காணப்படும் கொய்யா, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை இலகுவாக்கின்றது. ஆனால், குடல் எரிச்சல் நோய் உள்ளவர்களின் செறிமானத்தை பாதிக்கும்.
கொய்யாவில் இருக்கும் குறைவான கிளைகெமிக் இன்டக்ஸ் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா சிறந்த பழமாகக் பரிந்துரைக்கப்பட்டாலும் கொய்யாவை தினசரி சாப்பிட்டாலோ அல்லது அதிகமாக சாப்பிட்டாலோ, உங்கள் ரத்த சர்க்கரை அளவை வெகுவாக உயர்த்திவிடும்.