நடிகர் விஜய்யா இது? லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன்பிறகு சமீபத்தில் விஜய் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில் விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் தி கோட் படப்பிடிப்புக்கு சென்றார்கள்.
அதனை தொடர்ந்து நேற்றும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் பலரும் கூட்டமாக சென்று ஷூட்டிங் ஸ்பார்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை பார்க்க சென்ற விஜய் ஒரு வேன் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். அப்போது விஜய் தி கோட் படத்திற்காக மீசை மற்றும் தாடியை எடுத்துக்கொண்டு இளமையான தோற்றத்தில் இருந்தார்.
இதனை பார்த்த பலரும் இது நடிகர் விஜய்யா? என கேள்விகளை எழுப்பினார்கள். அந்த அளவிற்கு விஜய் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். மேலும் நெட்டிசன்கள் அவருடைய லுக் பற்றி ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இந்த கெட்டப் தி கோட் படத்தில் இளம் வயது விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தான் எனவும் கூறப்படுகிறது.