தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியா? டுவைன் பிராவோ முக்கிய அப்டேட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமான டுவைன் பிராவோ அந்த அணியுடன் இணைந்துள்ளார். ஐபிஎல் 2024ல் பங்கேற்க சேப்பாக்கம் வந்த அவர், சூடான பல செய்திகளை கொடுத்திருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோ, இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தரமாக இருக்கும் என கூறியுள்ளார். குறிப்பாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே செம ஸ்டிராங்காக இருக்கிறது என்றும், அதனை ஐபிஎல் தொடரில் பார்ப்பீர்கள் என கூறியுள்ளார். சிஎஸ்கேவின் பேபி மலிங்கா மதீஷ பத்திரனா, முகேஷ் சவுத்திரி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், முஸ்தாஃபிசூர் என அனுபவமும், இளமையும் கலந்து பட்டாளமாக இருப்பதாக கூறியிருக்கும் பிராவோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனாக இருப்பதால், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கான எல்லா அம்சங்களும் தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த அணியாக பார்க்கும்போது இந்த ஆண்டும் சிஎஸ்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறிய அவர், அதற்காக மெத்தனமாக இருக்கமாட்டோம், எப்போதும் எங்களுடைய திட்டம் என்னவாக இருக்குமோ அதனையே இந்த ஆண்டும் பின்பற்றுவோம் என கூறியுள்ளார். முதலில் லீக் போட்டிகளில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவோம், அடுத்தது பிளே ஆஃப் சுற்றுகளில் கவனம் செலுத்துவோம், இந்த இரண்டையும் சரியாக செய்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடுவோம் என்றும் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் செம ஸ்டிராங்காக இருப்பதாக கூறியிருக்கும் பிராவோ மற்றதை எல்லாத்தையும் விட தங்களிடம் தல தோனி கேப்டனாக இந்த ஆண்டும் இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியாக கூறியுள்ளார். அவர் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறார், என்னை பொறுத்தவரை இந்த ஐபிஎல் 2024 அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்காது என டுவைன் பிராவோ கூறியிருக்கிறார். இருப்பினும் அவருடைய முடிவு என்ன என்று எனக்கு தெரியாது என தெரிவித்திருக்கும் பிராவோ, தோனி விரும்பும் வரை அவர் விளையாடுவார் என தெரிவித்துள்ளார். மேலும், தோனியின் ஹேர் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறியுள்ளார். எரிக் சிமோன்ஸ் உடன் இணைந்து சிஎஸ்கே அணியில் இருக்கும் இளம் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் பிராவோ, எதிர் வரும் ஐபிஎல் 2024 சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *