சைரன் பட யுவினாவின் அம்மாவா இது ? எவ்ளோ அழகா இருக்காங்க

சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் ஜெயம்ரவியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த யுவினாவின் அம்மாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
யுவினா
உறவிற்கு கைகொடுப்போம் என்ற சீரியலின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் யுவினா. இதை தொடர்ந்து 2014ல் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நடித்திருந்நதார்.
இதற்கு பின்னர் மஞ்சப்பை, அதிதி, மேகா, அரண்மனை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இன்னும் நிறைய படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவினா தற்போது சைரன் படத்தில் ஆளே மாறி நடித்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் வீரம் படத்தில் குழந்தையாக நடித்த பாப்பாவா இது ?என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இவரின் அம்மா ஒரு நடிகை மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கிறார் மற்றும் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.