விஜய்யின் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது? எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க
விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்பட நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தலைவா திரைப்படம்
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தலைவா.
இதில் விஜய், சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடும் எதிர்ப்பு மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடிகை ராகினி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ராகினியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆளே மாறிட்டாங்களே… என கமெண்ட் செய்து வருகின்றனர்.