விஜயகாந்தின் தம்பிக்கு இப்படி ஒரு நிலையா? மதுரையில் அவர் நிலை இதுதான்!
கடந்த மாதம் 28 ஆம் தேதி தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
கண்ணீருடன் மக்கள் வெள்ளம் சூழ ஒட்டுமொத்த திரையுலகத்தினர் ஒன்று திரண்டு விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்த் நல்ல மனிதர், இரக்க குணம் உள்ளவர், எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் கொண்டவர் என்று பலரும் கண்ணீருடன் விஜயகாந்தை பார்த்து சென்றனர்.
ஒரு மனிதராகவும் , நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் எண்ணில் அடங்காதது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஜயகாந்த்துடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர், 6 சகோதரி மற்றும் 6 சகோதரர்கள்
சினிமாவில் மேல் ஏற்பட்ட காதலால் சென்னை வந்த விஜயகாந்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
விஜயகாந்தின் சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில செட்டிலாகிவிட்டனர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் தம்பிகளான பால்ராஜ், செல்வராஜ் தங்களுடைய குடும்பத்துடன் விஜயகாந்தின் மதுரை பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் தம்பி செல்வராஜ் மதுரையில் பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும், விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆனதால் அவர் தன்னுடைய பூர்வீக வீட்டுக்கு செல்வதையே நிறுத்திக் கொண்டாராம். எப்போவாவது ஒரு முறை குலதெய்வ கோயிலுக்கு மட்டும் குடும்பத்துடன் வருவாராம்.