அதிகம்பேர் பார்க்கும் சீரியல் இதுதானா? டிவி சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் உள்ள சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். தமிழ் சேனல்கள் பல சேரியலைகளி ஒளிபரப்பி வருகின்றன. கதை, கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான நடிப்பு, வசனம், திடீர் திருப்பங்கள் என மக்கள் மத்தியில் அனைத்து சேரியலைகளுமே இடம்பிடிக்கவில்லை என்றாலும், மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் சில உள்ளது. சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்திற்கு டிவியின் முன் வந்து ஆஜராகி விடுவார்கள் ரசிகர்கள். அப்படி மக்கள் மிஸ் பண்ணாமல் பார்க்கும் சீரியல்களில் நமது சீரியலும் டிஆர்பி யில் முன்னிலையில் வரவேண்டும் என்று சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலும் டிஆர்பி யில் ஆதிக்கம் செலுத்தும் சேனலாக பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் முன்னிலை வகிக்கின்றன. சீரியல்களில் முன் வருவது யார் என்ற போட்டி சன் டிவி க்கும் விஜய் டிவிக்கும் நடந்து வருகிறது. சில வாரங்களாகவே விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி விட்டு தொடர்ந்து சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 லிஸ்டில்ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த முறையும், சன் டிவி தான் முதல் 5 இடங்களையும் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் உள்ளது. வெறும் புள்ளிகளில் 4 வது இடத்தை தவறவிட்டிருக்கிறது விஜய் டிவி.