35 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா… பைக் வாங்கறதுக்கு பதிலாக இந்த காரை வாங்கீரலாம்…
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,406 செலிரியோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,418 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 28.90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
குறைவான விலை (Price) மற்றும் அதிக மைலேஜ் (Mileage) ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில், இந்த அளவிற்கு சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை 5.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 7.09 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ காரானது பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜினை காட்டிலும், சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது.
செலிரியோ காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி செலிரியோ காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சுஸுகி கனெக்ட் போன்றவை இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.
இவை தவிர, ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி செலிரியோ காரை இந்திய சந்தையில் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.