“இதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு தரும் மரியாதையா? ஏன் லேட்?” – பிசிசிஐ மீது கவாஸ்கர் விமர்சனம்
இந்திய கிரிக்கெட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சுனில் கவாஸ்கர். எண்பதுகளில் விளையாடி ஓய்வு பெற்று இருந்தாலும் கூட, அவருடைய பேச்சுக்கு இன்றளவும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய பொழுது அவர்களுடைய வேகப்பந்து வீச்சுப்படை மிகவும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. இப்பொழுது வரை கூட எந்த அணிக்கும் அப்படியான வேகப்பந்து வீச்சு தாக்குதல் அமையவில்லை என்று கூறலாம்.
அப்படியான வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக, ஹெல்மெட் கூட இல்லாமல் விளையாடி பல சதங்கள் அடித்தவர் கவாஸ்கர். இன்றளவும் பேட்டிங் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.
ஓய்வுக்குப் பிறகு தொடர்ச்சியாக கிரிக்கெட் வர்ணனையில் நாடு நாடாக பறந்து கொண்டிருப்பவர். பேட்மேன்கள் செய்யும் தவறுகளை அப்பொழுதே மிகச் சரியாக கனித்து உடனே கூறி விடுவார். இப்பொழுது மிகத் தைரியமாக பிசிசிஐ மீது தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.