உதயநிதி அப்பன் வீட்டு சொத்தை வச்சிட்டு பதவியில் இருக்காரா ? நிர்மலா சீதாராமன் காட்டமான பதிலடி.!!
நிதி கொடுக்கும்போது மக்கள் பணத்தை தான் கேட்கிறோம். அவங்க அப்பன் வீட்டு பணத்த கேக்கல என்ற உதயநிதி விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
அவங்க பாஷை எப்போதும் அப்படித்தான். சனாதன தர்மம் கூட அப்படித்தானே நாங்க அழிக்க வரல, ஒழிக்கவே வந்திருக்கோம் என்று பேசினார், இல்லையா ? அவரோட பாஷை எப்பவும் அப்படித்தான் இருக்கும். அதனால அவங்க அப்பன் வீட்டு பணமா ? அப்படி என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுறவங்க…. அவங்க அப்பன் வீட்டு சொத்த வச்சிட்டு இன்னைக்கு பதவி அனுபவிச்சிட்டு இருக்கிறாரா? அப்படின்னு சொல்ல முடியுமா ? கேட்க முடியுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுக்க தானே செய்றோம். இந்த அப்பன் வீடு…. உன் ஆத்தாவா ? இந்த பேச்சு எல்லாம் அரசியலில் நல்லதல்ல. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வர ஆசைப்படுறார் இல்லையா ? அந்த குடும்பமும் ஆசைப்படுவது இல்லையா ? பேசுற பாஷை, மொழி, அவுங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழ் அறிஞர்…. அதனால நம்ம நாக்குல கொஞ்சம் அந்த பதவிக்கு ஏத்த அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரணும்.
இது நான் பொதுப்படையா சொல்றேன். அவர் மேல கால் புணர்வுவோம், ஏதோ வச்சுக்கிட்டு சொல்லல. இதுக்கு முன்னாடி ஒரு உதாரணம் பார்த்தோம். இப்போ இன்னொரு உதாரணம் பார்க்கிறோம். மக்கள் அங்க மழைல அவஸ்தப்பட்டு இருக்கும்போது…. பணம் அனுப்பி கொடுத்தது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் டிசாஸ்டர் ரிலீஃப் பண்ட்… அட்வான்ஸ் பணத்தை 10ஆம் தேதி டிசம்பருக்குள் 900 கோடி கொடுத்து இருக்கோம்.
அது என் அப்பன் சொத்துனு…. உங்க அப்பன் சொத்துன்னு நான் சொல்ல மாட்டேன்….. எப்போதும் சொல்ல மாட்டேன்…. பொறுப்புள்ள பதிவில் இருக்கிறவங்க அந்த பொறுப்பை உணர்ந்து பேசணும்….. தயவு செய்து நீங்க அடுத்த தடவை அவர் முன்னாடி இருந்து கேள்வி கேட்கும் போது கூட சொல்லுங்க….. அந்த அம்மா இப்படி பேசினாங்க….
நாம எல்லாரும் கூட யோசிச்சு பேசணும்… அவுங்க கொடுக்க வேண்டிய பணத்தை முதலில் கொடுத்துட்டாங்க….. இந்த டீம் போய் பார்த்துட்டு போன பிறகு, நீங்களும் அதுக்கு கலந்து ஆலோசனை பண்ணி…. உங்களுக்கு சொல்ல வேண்டியது எல்லாம் சொன்ன பிறகு, அவங்க போயி என்ன பண்ணனுமோ பண்ணுவாங்க. உங்க அப்பாவும் போய் பிரதமர போய் பாத்துட்டு வந்துருக்காங்க. அதனால பண்ணுவாங்க… அதனால கொஞ்சம் பொறுமையா ? வாய் வார்த்தை பொறுமையும் நல்ல குணங்கள் என தெரிவித்தார்.