உங்கள் வீட்டு சிலிண்டருக்கு மானியம் வருதா? இல்லையா ? தெரிந்து கொள்வது எப்படி ?

சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகை தங்களது வங்கிக் கணக்கில் வந்துவிட்டதா என்று நிறையப் பேருக்கு தெரிவதில்லை. ஏனெனில் சிலருக்கு அதுபற்றிய குறுஞ்செய்தி வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், சமையல் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா இல்லையா, எவ்வளவு வருகிறது என்று தெரிந்துகொள்ள நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
முதலில், Mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று முகப்பு பக்கத்தில் உள்ள இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படத்தில் உங்களுடைய சிலிண்டர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆன்லைனில் மானியம் குறித்து பார்ப்பதற்கு வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அதில் மானியம் தொடர்பான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இருந்தாலும் இந்த நடைமுறை சிக்கல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுவதால் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க மற்றொரு வழியும் உள்ளது. அதாவது சிலிண்டர் டெலிவரி எடுத்து வரும் நபரிடம் வாடிக்கையாளர்கள் மானியம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி மேன்களுக்காகவே பிரத்தியேகமாக மொபைல் செயலி ஒன்றும் செயல்பாட்டில் உள்ளது.
அதில் டெலிவரி விவரம் மற்றும் பணம் செலுத்துவது, மானியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். HP கேஸ் சிலிண்டர் டெலிவரி மேங்களிடம் vitran என்ற மொபைல் செயலி உள்ளது.இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களின் சிலிண்டர் மானியம் குறித்த விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.