பஞ்சாயத்தில் ட்விஸ்ட் கொடுத்த இசக்கி… அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் முத்துப்பாண்டி எல்லார் காலிலும் விழுந்து இசக்கியோட சேர்த்து வைக்க சொல்லி கேட்க ஷண்முகம் மறுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல ஊர் பெரியவர்கள் அவன் தான் நல்லா பாத்துக்கறேன்னு சொல்றானே பா அனுப்பி வை என்று சொல்ல ஷண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.

இதனால் ஊர் பெரியவர்கள் இசக்கியோட முடிவை சொல்லட்டும் என்று சொல்ல ஷண்முகம் அவ என்ன சொல்லணும் என்னுடைய முடிவு தான் அவளோட முடிவு என்று சொல்ல இசக்கி வாயால சொல்லட்டும் என்று பேசுகின்றனர். உடனே ஷண்முகம் இசக்கியிடம் அவ வேண்டான்னு சொல்லிட்டு தாலியை கழட்டி போட்டுட்டு வா புள்ள என்று சொல்ல இசக்கி நான் சேர்ந்து வாழறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

ஷண்முகம் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியாக சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார், ஷண்முகம் இந்த அண்ணன் முக்கியமா? இல்ல அவன் முக்கியமா? அவன் தான் முக்கியம்னா இந்த துண்டை தாண்டி போ. அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருக்காது என்று சொல்ல இசக்கி துண்டை தாண்டி சென்று பேரதிர்ச்சி கொடுக்கிறாள்.

இசக்கி அண்ணனுக்காகவும் ரதனாவின் வாழ்க்கைக்காகவும் எடுத்த முடிவை புரிந்து கொள்ளாத ஷண்முகம் இனிமே நீ இந்த வீட்டிற்க்கு வர கூடாது என்று அவளது துணிகளை எடுத்து வெளியே போட்டு கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? இசக்கி என்ன செய்ய போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *