போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமா?

ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஹமாஸ் படையினரிடம் மீதமுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான கட்டமைப்பிற்கு இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்த பேச்சுவார்தையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என நம்பத்தகுந்த அதிகாரிகள் NBC செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான வரை இன்று ஹமாஸ் படையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான சம்மதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் கத்தார் பிரதமர் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த உளவு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். சண்டை நிறுத்தம் மற்றும் அத்தியாவசிய உதவிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துதலுக்கு மாற்றாக ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகள் விடுவிப்பை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்ரேலிய படைகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவர் என தெரிகிறது.

முந்தைய போர் நிறுத்தம்
இதற்கு முன் பேச்சுவார்த்தைகளின் மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கையில் 100 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 240 பாலஸ்தின பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த போர் நிறுத்தம் ஒரு வாரத்திற்கு பிறகு சீர்குலைந்தது. ஹமாஸ் படையினரிடம் தற்போது காசாவில் 100 பிணைக் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *