இந்திய ட்ரோன்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்: தீவிரமடையும் காசா போர்! மத்திய கிழக்கு நாடுகள் கவலை

இஸ்ரேலுக்கு 20 ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்கள் இந்தியா வழங்கி இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் உலக அரங்கில் சர்ச்சை வெடித்துள்ளது.

இஸ்ரேலில் இந்திய ட்ரோன்கள்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவத்தினற்கும் இடையே காசாவில் தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலுக்கு 20 ஹெர்ம்ஸ் 900 ரக ட்ரோன்கள் (Hermes 900 drones)இந்தியா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள தனியார் உற்பத்தில் தொழிற்சாலையில் தாயாரிக்கப்பட்ட ட்ரோன்கள்(India-made drones ) ஆகும்.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் காசா போரில் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

மேலும் இது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை சிக்கலில் தள்ளுக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகள் கவலை
இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் போர் தாக்குதல் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய கிழக்கு நாடுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்கள் கண்காணித்தல், மற்றும் குண்டு வீச்சு தாக்குதல் ஆகிய இரண்டிலும் அதிக திறன் கொண்டவை.

இவை ஏற்கனவே காசாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *