Israel – Hamas War: “இலக்கை அடையும்வரை போர் நிற்காது..!” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
பாலஸ்தீனத்தின் காஸாவில் மூன்று மாதங்களாக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தங்களின் இலக்குகளை அடையும் வரை போர் நிற்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்
அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அதற்கடுத்த நாள்முதல் காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில், உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை மட்டும் 22,000-ஐக் கடந்துவிட்டது. ஆனாலும், தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியபாடில்லை.
ஐ.நா வரை இஸ்ரேலுக்கு எதிராகப் போர் நிறுத்தக் குரல்கள் எதிரொலித்தபோதும், `ஹமாஸை முற்றிலுமாக அழித்தாக வேண்டும். அதுவரை போர் ஓயாது’ என பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலில் உயிரிழப்பதென்னவோ பாலஸ்தீன பொதுமக்களும், குழந்தைகளும்தான்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – ஹமாஸ்
எனவே, இந்த அனைத்து இலக்குகளையும் நாங்கள் அடையும் வரை போர் நிறுத்தப்படாது. தெற்கிலும், வடக்கிலும் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அதுவரை, அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முழுமையான வெற்றியை அடையும் வரை ஒன்றுபட்ட சக்திகளுடன் நாங்கள் தொடர்வோம்” என்று கூறியிருக்கிறார்.