ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை காரணமின்றி கைது செய்த இஸ்ரேல்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,500 பேரை காரணமின்றி இஸ்ரேல் கைது செய்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களை முறையான காரணங்களின்றி இஸ்ரேல் ராணுவம் கைதுசெய்வதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுகின்றன.
இந்நிலையில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய சோதனையில் மேற்கு கடற்கரைப் பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
காலவரையற்ற சிறை
கைது செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது சிறையலடைக்கப்படுகிறார்கள் எனவும், வழக்குகளோ, விசாரணைகளோ இன்றி காலவரையற்ற சிறை தண்டனைகூட இஸ்ரேல் நிர்வாகத்தால் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்துவரும் போரில் 27,000-த்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.