மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு
மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தாக்குதல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 24,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு பணி
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலில் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சிரியாவின் மனித உரிமை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.