உச்சக்கட்ட தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் – நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கை

ரபா நகரை நோக்கி இஸ்ரேல் இராணுவத்தின் தரைப்படை முன்னேற திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காசா பகுதியில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் மற்றும் அடுத்தகட்ட இராணுவ செயல்பாட்டு திட்டத்தை இராணுவம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த தகவல்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மனிதநேய அமைப்புகள் கவலை
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் இராணுவம் முன்மொழிந்துள்ளது.

ஆனால், பொதுமக்கள் எப்படி எந்த பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்பது குறித்த எந்த விவரமும் அந்த அறிக்கையில் இல்லை.

ரபா நகரில் தற்போது சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள் உள்ளனர். இந்நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்கினால் ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள் என வெளிநாடுகள் மற்றும் மனிதநேய உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *