Doctor, Nurse வேடத்தில் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் வீரர்களை சுட்டுத்தள்ளிய இஸ்ரேல்! வைரல் வீடியோ
இஸ்ரேலிய சிறப்பு படையினர் மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து, ஹமாஸ் படையைச் சேர்ந்த மூவரை சுட்டுத் தள்ளிய வீடியோ வைரலாகியுள்ளது.
மாறுவேடத்தில் இஸ்ரேலிய சிறப்பு படையினர்
Jenin நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய துருப்புகள் மருத்துவர், செவிலியர் மற்றும் பொதுமக்கள் போன்ற வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர்.
வைரல் வீடியோ
பின்னர் அங்கிருந்த ஹமாஸ் போராளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.