வெளிப்படையாக அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு முழு ஆதரவுடன் ஆயுதங்களும் வழங்கிவரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் போர் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், ஹமாஸ் படைகள் மீதான முழு வெற்றியை எட்டும் வரையில் இந்த போர் தொடரும் என்றார். ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழித்து, இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டுவர பல மாதங்களாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் இதுவரையில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு 25,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 85 சதவிகித மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில், தனது தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், போர் தொடர்பில் அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபடவும் கடுமையான அழுத்தத்தை இஸ்ரேல் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.