ஐடி ஊழியர்கள் ரத்த கண்ணீர்.. மொத்த அமெரிக்காவிலும் 1 வருடத்தில் வெறும் 700 பேருக்கு மட்டுமே வேலை..!
இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தடுமாறி வருவது அனைவருக்கும் தெரியும், இதற்கு முக்கியக் காரணமாக ஐடி நிறுவனங்களுக்குச் சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாகப் புதிய திட்டங்கள் கிடைக்காத காரணத்தால் இந்த நிலை என்பதே உண்மை.ஆனால் உண்மையில் இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்காவில் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது என்பது தான் ஐடி ஊழியர்களைப் பயமுறுத்தும் உண்மை.
அமெரிக்க அரசின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது, 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஐடி துறையில் வெறும் 700 புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சொல்லப்போனால் இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்த டேட்டா பலரையும் தூக்கி வாரிப்போட்டு உள்ளது.2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிய ஐடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருடத்திற்கு 2,67,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கியதாக அமெரிக்கத் தொழிலாளர் அமைச்சக தகவல் கூறுகிறது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் பெரும்பாலான காலகட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வருடத்தின் இறுதியில் வெறும் 700 புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த மோசமான நிலையில் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பணிநீக்கம் செய்யப்பட்டது, பணிநீக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிதாக ஊழியர்களை நியமிக்கப்படாததும், ஒட்டுமொத்த ஐடி துறையும் புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுவதும் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.குறிப்பாக ஏஐ பயன்பாட்டுக்கு வந்த பின்பு அதிகப்படியான பணிகள் ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளது, இதனால் பலரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதற்குக் கூகுள் நிறுவனத்தில் நேற்று நடந்த பணிநீக்கம் முக்கிய ஆதாரமாகும். கூகுள் நிறுவனம் 2023ல் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் பணிநீக்க செய்ய இறங்கியுள்ளது. இனியும் பணிநீக்கம் தொடரும் எனவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.