”வெற்றி என்ற வார்த்தைக்கு எனக்கு 5,600 நாட்கள் ஆகியுள்ளன” நடிகர் சாந்தனுவின் நெகிழ்ச்சி பதிவு!

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கேரக்டரில் சாந்தனுவும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக நடிகர் பாக்யராஜ் உருக்கமான பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் நடித்த சக்கரகட்டி படம் முதல் ப்ளூ ஸ்டார் படம் வரையிலான இந்த சினிமா பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இது எனக்கு பல்வேறு விதமான உணர்வுகளை எனக்கு கொடுத்துள்ளது. வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன. இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன் பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *