கீழ்த்தரமான மனிதர்களை பார்ப்பது அருவருப்பானது! கொந்தளித்த திரிஷாவின் பதிவு
தன் பெயரை குறிப்பிட்டு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பேட்டியளித்ததற்கு, நடிகை திரிஷா பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தனது கட்சியினர் சிலர் குறித்து குற்றம்சாட்டிய அவர், கூவத்தூரில் அதிமுகவினர் ஆட்டம் போட்டனர் என்றும் கூறினார்.
அத்துடன் நடிகை திரிஷா, கருணாஸ் ஆகியோர் குறித்தும் அவர் பேசியது பரபரப்பான நிலையில், நடிகர் சேரன் முதல் நபராக கண்டனத்தை தெரிவித்ததுடன், ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திரிஷா கொந்தளிப்பு
இந்த நிலையில் நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது.
தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனிமேல் கூற வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத்துறை செய்யும்’ என தெரிவித்துள்ளார்.