திருமணமானவர் என்பதை குறிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கடமை – இந்தூர் நீதிமன்ற நீதிபதி கருத்து!
பெண்களை தங்களை திருமணமானவர் என்பதை காட்டிக்கொள்வதற்கு நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை என்று இந்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வைக்குமாறு, இந்தூர் குடும்பல நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ், தன் உரிமையை மீட்டு தர வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கணவர் அந்த பெண்ணை கைவிடவில்லை. அந்த பெண் தான் கணவரிடமிருந்து பிரிந்து சென்றுள்ளார். அதனால் அந்த பெண் உடனடியாக கணவரின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் தான் நெற்றியில் குங்குமம் வைப்பதில்லை என்று அந்த பெண் கூறியிருந்த நிலையில், குங்கும் வைப்பது மதக் கடமையாகும். தான் திருமணமானவர் என்பதை உணர்த்துவற்காகவே பெண்கள் இவ்வாறு குங்குமம் வைத்துக்கொள்கின்றனர் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.