தினமும் ”கருப்பட்டி” சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!
* பதநீரை காய்ச்சி அதிலிருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு மருத்துவ குணம் அதிகம். கருப்பட்டியில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும்.
* ரத்தத்தை சுத்திகரித்து உடலை சுறுசுறுப்பாகி மேனியை பளபளப்பாக வைத்துக் கொள்ளும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காகவும், இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பையை வலுப்பெற வைப்பதற்காகவும் கருப்பட்டி பெரிதும் உதவுகிறது.
* பெண்களுக்கு உளுத்தம் பருப்பு, கருப்பட்டி சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலி குணமடைவதோடு மட்டுமல்லாமல் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
* சீரகம், கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றி பசி எடுக்கும். ஓமத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குணமடையும்.
* கருப்பட்டி தொடர்ந்து சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாடு சீராகும். கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது.
* ஆண்மை வீரியபடுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனி பங்கு உள்ளது. சீனிக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தினால் உடலின் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும்.