முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள்! இதை மறைய வைக்க புதினாவை இப்படி பயன்படுத்துங்க!
முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள்! இதை மறைய வைக்க புதினாவை இப்படி பயன்படுத்துங்க!
நம்முடைய முகத்தில் கருப்பு கருப்பாக புள்ளிகளாக தோன்றி முகத்தின்.
அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய வைக்க புதினாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலருக்கும் முகத்தில் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் இருக்கும். இதை கரும்புள்ளிகள் என்று அழைக்கிறோம். இந்த கரும்புள்ளிகள் நம்முடைய முகத்தில் ஏற்படுவதால் முகத்தின் அழகு குறைகின்றது.
நம்முடைய முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முக்கிய காரணம் என்னவென்றால் அது சூரியனில் இருந்து வெளி வரும் சூரியப் புள்ளிகள் தான். மேலும் தோல் அழற்சி, மருந்தின் பக்க விளைவு போன்ற காரணங்களாலும் கரும்புள்ளிகள் தோன்றும்.
இந்த கரும்புள்ளிகளை மறைய செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றது. பல வழிகள் இருந்தாலும் நாம் புதினா இலைகளுடன் ஒரு சில பக்கங்களை சேர்த்து எவ்வாறு கரும்புள்ளிகளை மறையச் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* புதினா இலைகள்
* எலுமிச்சை சாறு
* தேன்
செய்முறை…
முதலில் புதினா இலைகளை சுத்தப்படுத்தி அதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள புதினா இலை விழுதில் சிறிதளவு தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். தெரிந்து இதை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும்.