ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்க்கை கொடுத்ததே ரோகித் சர்மா தான்.. உண்மையை சொன்ன மும்பை நிர்வாகி!

2016ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் மோசமாக இருந்த போது, கேப்டன் ரோகித் சர்மா ஆதரவாக இருந்ததாக முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் பலரும் அதிகளவு ஆதரவளித்து வருகின்றனர். 5 கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி நிர்வாகம் துரோகம் செய்ததாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் மும்பை அணியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேபோல் மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா மனைவி ரித்திகாவும் மும்பை அணி நிர்வாகம் மீது கோபத்தில் இருக்கிறார்.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா நாளை மும்பை அணியின் பயிற்சி முகாமில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஜியோ சினிமாஸ் தரப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ரோகித் சர்மா குறித்து மும்பை அணியின் நிர்வாகிகளான ஜாகீர் கான் மற்றும் பார்த்தீவ் படேல் இருவரும் பேசினார்கள்.

அதில், 2016ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குள் வந்தார். ரூ.10 லட்சம் அடிப்படை விலையில் மும்பை அணியால் வாங்கப்பட்ட அவர், பெரியளவில் செயல்படவில்லை. அப்போது இந்திய அணிக்காகவும் விளையாடாததால், மும்பை அணி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. அவர் விடுவிக்க முடிவு செய்த போது, ரோகித் சர்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா தான் அதிகமாக வாய்ப்பு அளித்து திறமையை வெளிப்படுத்த காரணமாக இருந்தார்.

இதேபோல் 2015ஆம் ஆண்டு பும்ரா முதல்முறையாக மும்பை அணிக்குள் வந்தார். அவரின் செயல்பாடுகள் மீது மும்பை அணி நிர்வாகம் அதிருப்தி கொண்டிருந்தது. இதனால் சீசனின் பாதியிலேயே அனுப்பலாம் என்று முடிவெடுத்தது. ஆனால் பும்ராவை அணியில் வைக்குமாறு ரோகித் சர்மா கேட்டுக் கொண்டார். இதன் பலனை மும்பை அணி நிர்வாகம் அடுத்த சீசனிலேயே அறுவடை செய்தது. என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவை பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், சுயநலமில்லாதவர் என்றே சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *