ஒரு வருஷம் கழிச்சி தான் சேல்ஸ்க்கு வரப்போகுது! இப்பவே 16 ஆயிரம் பேர் புக் பண்ணிட்டாங்க!

விற்பனைக்கு வரவுள்ள எலெக்ட்ரிக் காருக்கு தற்போது சுமார் 16 ஆயிரம் பேர் புக்கிங் செய்து விட்டதாக அந்த வாகனத்தை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓர் ஆண்டுக்கு பின்பு வரை உள்ள காருக்கு மக்கள் மத்தியில் இப்பொழுதே இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறதா என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லேண்ட்ரோவர் என்ற கார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் முதல் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த காரை அந்நிறுவனம் வெளியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் கார் குறித்து மக்கள் மிகப்பெரிய மோகத்தில் மூழ்கினர். பலர் இந்த காரை வாங்க வேண்டும் என அறிவிப்பு வந்த போதே முடிவு செய்துவிட்டனர்.

இந்நிலையில் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்த ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் காருக்கு கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன் மூலம் இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச அளவில் இதுவரை சுமார் 16 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார் அறிமுகமாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பே இந்த காருக்கு 16 ஆயிரம் பேர் புக் செய்துள்ளார்கள் என்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை இந்த முன்பதிவு என்பது காட்டுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் அதில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் தான்.

இந்த லேண்ட்ரோவர் நிறுவனம் தயாரிக்கும் ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் கார் தற்போது உள்ள கம்பஷன் இன்ஜின் மாடல் காரை போலவே உருவாக்கப்படுகிறது. இந்த கார் தான் அந்நிறுவனத்தின் முதல் பேட்டரி எலெக்ட்ரிக் காராகும். இது அமைதியான மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த காராகவும் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை கம்பஷன் இன்ஜின் காரில் உள்ள அதே டிசைன் தான் கிட்டத்தட்ட இந்த காரிலும் பொருத்தப்படுகிறது.

காருக்காக 800 ஓல்ட் சார்ஜர் இருக்கிறது. இது விரைவாக காரை சார்ஜ் ஏற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பெர்ஃபார்மன்ஸ் குறித்த தகவல்களை இதுவரை ரேஞ்ச் ரோவர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த காரின் விலை எவ்வளவு? காரில் உள்ள பேட்டரி அளவு எவ்வளவு? இதன் மூலம் எவ்வளவு ரேஞ்ச் தரும்? இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் என்ன வகை மோட்டார் என எந்த தகவலும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் நிச்சயம் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் என்பது தற்போது உள்ள வி8 மாடல் பெர்ஃபார்மென்ஸ் காருக்கு ஈடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக 500க்கும் அதிகமான பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டார் இதில் இருக்கும் எனவும் டிவின் மோட்டார் செட்டப்புடன் ஆல்வில் டிரைவ் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் புரோட்டோடைப் டிசைன் செய்யப்பட்ட மாடல் தற்போது சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக ஸ்வீடன் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இந்த கார்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காருக்கு கீழே அடிபாகத்தில் பேட்டரி பொருத்தப்படுகிறது. இதன் உழைப்பு மற்றும் தெர்மல் பெர்ஃபார்மன்ஸ் குறித்த ஆய்வுகள் எல்லாம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த காரின் மைல்டு மற்றும் பிளக் இன் ஹைபிரிட் ஆகிய வெர்ஷன்கள் எல்லாம் தற்போது தயாரிக்கப்படும் திட்டங்களில் இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டுக்கு வந்தால் பிஎம்டபிள்யூ ஐ எக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் விலை நிச்சயம் கோடிகளில் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *