உங்களை எல்லாம் நம்பினால் வேலைக்கே ஆகாது.. களத்தில் குதித்த பென் ஸ்டோக்ஸ்.. வெறி கொண்டு செய்த வேலை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக வெறிகொண்டு செய்யும் ஒரு பணி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற வெறியில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. வெறும் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடி வருகிறார். இந்த நிலையில், தான் பந்து வீசுவது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியா போன்ற ஆடுகளங்களில் பென் ஸ்டோக்ஸ் மிதமான வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்டெம்பை நோக்கி பந்து வீசுவது போன்ற யுத்திகள் அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும். மேலும் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் அடித்து துவம்சம் செய்து விட்டார்கள். குறிப்பாக ஆண்டர்சன் ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸர்களை அடித்து பின்னி விட்டார்.

13 ஓவர் வீசி ஆண்டர்சன் 78 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். அதாவது ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் என்ற விகிதத்தில் அவர் ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். இதனால் நான்காவது டெஸ்டில் ஆண்டர்சன் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் மாற்று வேகப்பந்துவீச்சாளர் வந்தாலும் இனி உங்களை எல்லாம் நம்ப தேவையில்லை தானே பார்த்துக் கொள்கிறேன் என்ற விதத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது பௌலிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினால் அவர்களுக்கு மிதமான வேகத்தில் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துகளை வீசினால் நிச்சயம் அவர்கள் தடுமாறுவார்கள். இந்த யுத்தியை கையில் எடுத்து பென் ஸ்டோக்ஸ் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக நான்காவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் என்ற ஆல்ரவுண்டரை இந்திய அணி சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *