“இங்கிலாந்து பாஸ்பால் விளையாடினா நல்லது.. 2நாள்ல மேட்ச்ச முடிச்சிட்டு போயிடுவோம்” – சிராஜ் அதிரடி பேச்சு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியாக அணுகி வரக்கூடிய அணியாக இருக்கிறது.
அவர்களின் இந்த அதிரடி அணுகுமுறைக்கு பாஸ்பால் என்று பெயர்.
கடந்த ஆண்டுகளில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், பிரண்டன் மெக்கலம் தலைமை பயிற்சியாளராகவும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.
இந்த ஜோடி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை வெல்வதற்கு வெள்ளைப் பந்துக்கு தயார் செய்யப்படும் தட்டையான பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களை தயார் செய்தார்கள். அதில் பேட்டிங்கை அதிரடியாக விளையாடுவது என்று முடிவு செய்தார்கள்.
இந்த அணுகுமுறை அவர்களுக்கு வெற்றிகளை கொடுத்தது. இந்த தாக்குதல் முறையால் எதிர் அணிகள் மனரீதியாக களத்தில் பலவீனம் அடைந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் வெளிநாடுகளிலும் இந்த டெஸ்ட் அணுகுமுறையை தொடர்ந்தார்கள்.
இதன் காரணமாக இங்கிலாந்து பாகிஸ்தான் வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அதிரடியாக விளையாடி மூன்றையும் வென்றது. பாகிஸ்தானில் இப்படி ஒரு வெற்றியை எந்த நாடுகளும் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடான பாகிஸ்தானில் பாஸ்பால் முறையில் வெற்றி பெற்ற காரணத்தினால், மற்றும் ஒரு ஆசிய நாடான இந்தியாவிலும் அதே முறையை கையாண்டு வெற்றி பெற இங்கிலாந்து நினைக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் இருந்தது. இந்தியாவில் அப்படியான ஆடுகளங்கள் இருக்காது. பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்தான் இருக்கும்.