பக் பக்-ன்னு தான் இருந்துச்சி.. ஆனாலும் நானே தான் ரோஹித் கிட்ட கேட்டேன்.. சூப்பர் ஓவர் குறித்து – ரவி பிஷ்னாய் பேட்டி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான அணியை வீழ்த்தி இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்கள் குவிக்க பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எளிதில் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட

வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.

பிறகு முதல் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் குவிக்க 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியும் 16 ரன்களையே குவிக்கவே சூப்பர் ஓவரும் சமமானது. இதன் காரணமாக இரண்டாவது சூப்பர் ஓவரும் நடைபெற்றது.

அந்த இரண்டாவது சூப்பர் ஓவரின் போது இந்திய அணி 11 ரன்களை குவிக்கவே 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது சுழப்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று பந்துகளில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *