பிப்., 1 முதல் இது கட்டாயம்! ஃபாஸ்ட் டேக் கார்டில் கேஒய்சி செய்வது எப்படி?
பாஸ்ட் டிராக் கார்டுகளை அதன் உரிமையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் டிஆக்டிவேட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எப்படி கேஒய்சி செய்வது என்பதை தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.
இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் டோல்கேட்டுகளை கார்டுகளையே அதிகம் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ஓடும் 96 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் ஃபாஸ்ட் டிராக் கார்டுகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்த கார்டுகளை வைத்திருக்கும் சிலர் இதை கேஒய்சி செய்யாமல் பயன்படுத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்தது.
இதையடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு செய்யும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டிராக் கார்டுகளை உடனடியாக அதன் உரிமையாளர்கள் கேஒய்சி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இப்படியாக கேஒய்சி செய்யப்பட்ட கார்டுகளையே வாகன உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இப்படியாக கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் எல்லாம் பிளாக் லிஸ்ட் செய்யப்படும் அல்லது முற்றிலுமாக செயல் இழக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் கார்டுகளை கை வைத்து செய்து விட்டாலும் சிலர் கேஒய்சி செய்ய மறந்து போய் உள்ளார்கள். அவர்கள் எப்படி தற்போது கேஒய்சி செய்யலாம் என்பதை தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
உங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்ட் டிராக் கார்டு கேஒய்சி செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் உடனடியாக உங்கள் செல்போன் மூலம் fastag.ihmcl.com என்ற இணையதள முகவரிக்குள் நுழைய வேண்டும் அங்கே உள்ள லாகின் என்ற பட்டனை அழுத்தி அங்கு நீங்கள் கார்டு வாங்கும் போது பதிவு செய்த செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்.
இந்த தளத்திற்கான பாஸ்வேர்டு உங்களிடம் இருந்தால் பாஸ்வேர்டு மூலம் நீங்கள் உள் நுழையலாம் அல்லது ஓடிபி நம்பரை பெற்று அதை பயன்படுத்தி உள் நுழைய முடியும். உள்ளே நுழைந்ததும் நீங்கள் மை ப்ரொபைல் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் மொபைல் நம்பர் கொண்டு எடுக்கப்பட்ட அத்தனை பாஸ்ட் டிராக் கார்டுகளும் இடம்பெற்று இருக்கும்.
அதில் அந்த கார்டின் கேஒய்சி நிலை குறித்த தகவல்களும் இருக்கும் நீங்கள் ஏற்கனவே கேஒய்சி செய்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை அந்த பாஸ்ட் டிராக் கார்டை தொடர்ந்து நீங்கள் அடுத்தடுத்த மாதங்களிலும் பயன்படுத்த முடியும். அதை அரசு கேஒய்சி இல்லாத காரணத்தால் பிளாக் லிஸ்ட் செய்ய மாட்டார்கள். இதுவே கேஒய்சி செய்யப்படாத கார்டாக இருந்தால் நீங்கள் உடனடியாக அதைக் கேஒய்சி செய்ய வேண்டும்.
இப்படியாக ஒரு பாஸ்ட் டேக் கார்டுக்கு கேஒய்சி செய்ய வேண்டும் என்றால் அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் உங்களுடைய அடையாளச் சான்றிதழ் உங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும். உங்களுடைய அடையாளச் சான்றிதழுக்காக கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தலாம்.
இப்படியாக உங்களது ஃபாஸ்ட் டேக் கார்டு பட்டியலில் கேஒய்சி செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் உடனடியாக அதில் கேஒய்சி செய்யும் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும் அதை கிளிக் செய்தவுடன் முதலில் உங்களது பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படத்தை முதலில் உள்ளீடு செய்ய வேண்டும் . பின்னர் உங்கள் அடையாள ப்ரூப் மற்றும் முகவரி உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன் பின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் உங்களது ஆவணங்கள் எல்லாம் கேஒய்சி சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். உங்கள் ஆவணம் கேஒய்சிக்கான காத்திருப்பு நிலையில் இருக்கும். உங்கள் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரிகள் அதை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்கள் கார்டு கேஒய்சி செய்யப்பட்ட கார்டாக இருக்கும்.
இப்படியாக கேஒய்சி செய்ய நீங்க ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்டால் அதை சரி பார்க்க 7 நாட்கள் வரை கால அவகாசம் ஆகும். அதற்குள் அதிகாரிகள் உங்கள் கேஒய்சி அப்டேட் செய்து விடுவார்கள். இப்படியாக உங்கள் கார்டுக்கான கேஒய்சியை அப்டேட் செய்ய ஜனவரி 31ஆம் தேதி தான் கடைசி தேதியாக இருக்கிறது. ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு கேஒய்சி அப்டேட் செய்யப்படாத கார்டுகள் பிளாக் லிஸ்ட் அல்லது டிஆக்டிவேஷன் செய்யப்படும்.