இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது. படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் ஒவ்வொரு ஊருக்கு சென்று படம் பற்றி பேசி ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் படக்குழு கோயம்புத்தூருக்கு சென்று இருந்தார்கள்.
அப்போது மேடையில், ஜெயம் ரவியை ரசிகர்கள் நடனம் ஆடும் படி கேட்டுக்கொண்டார்கள். இதனை கேட்டு கொண்டிருந்த ஜெயம் ரவி உடனடியாக எங்கேயும் காதல் படத்தில் இடம்பெற்று இருந்த நங்கை பாடலுக்கு செமையாக நடனம் ஆடினார். அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் இது ரீல் இல்லை ரியல்! என கூறி வருகிறார்கள்.