ஓலா தல தெறிக்க ஓடுவதற்கான நேரம் வந்தாச்சு.. பார்த்த உடனே வாங்க தூண்டும் ஸ்டைலில் ஏத்தர் 450 அபெக்ஸ் அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 450 அபெக்ஸ் (450 Apex) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இதுவே, அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 450 அபெக்ஸ் (450 Apex) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இன்று (ஜனவரி 6) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் சிறப்பு பதிப்பு ஆகும்.
மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் கால் தடம் பதித்து பத்து ஆண்டுகள் ஆகுவதை முன்னிட்டே நிறுவனம் இதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுகமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1.89 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை ‘செயல்திறனின் உச்சம்’ ஏத்தர் எனெர்ஜி குறிப்பிடுகின்றது.
தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் செயல் திறனை விட அதிக செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியதாக இதனை தயாரித்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறு அது குறிப்பிட்டு இருக்கின்றது. இத்துடன், ‘மேஜிக் ட்விஸ்ட்’ எனும் வசதியையும் முதல் முறையாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் அறிமுகம் செய்திருக்கின்றது.
இது நகர்புற பயணத்தை மிகவும் ரம்மியானதாக மாற்றும் வசதிக் கொண்டதாகும். இதுதவிர, ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் வாரி வழங்கி இருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதாலேயே சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மிக சிறந்த சூப்பரான வண்ண ஆப்ஷன்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதேவேளையில், இது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என ஏத்தர் எனெர்ஜி தெரிவித்து இருக்கின்றது. ஆனால், துள்ளியமாக எத்தனை யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன என்பதை அது துள்ளியமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் ஒரு சில ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனைக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இப்போது வெளியாகி இருக்கும், ஏத்தர் 450 அபெக்ஸ் 8 முதல் 9 மாதங்கள் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கின்றன. மேலும், புக்கிங்குகளும் சில வாரங்களுக்கு மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இப்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற மார்ச் மாதத்திலேயே 450 அபெக்ஸ் டெலிவரி வழங்கப்பட இருக்கின்றது.
வழக்கமான 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து மிகப் பெரிய அளவில் புதிய 450 அபெக்ஸ் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இதற்கு விநோத நிறத்தையும், அலங்கார பணிகளையும் அது கையாண்டிருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. இரண்டு லேயர் பெயிண்ட் ஸ்கீமில் இந்த ஸ்கூட்டரை அது அலங்கரித்து இருக்கின்றது.
இன்டியம் ப்ளூ மற்றும் ஆரஞ்சு பெயிண்டினாலேயே 450 அபெக்ஸ் அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஆரஞ்சு நிறமானது கான்ட்ராஸ்டாக இருக்கும் வகையில் உள்ளது. அது வீல்கள், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் இருக்கைக்கு அடியில் என பல பகுதியிலி இடம் பெற்றிருக்கின்றது. இது 450 அபெக்ஸ்-க்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.
இதே நிறமே லோகோ மற்றும் ஸ்கூட்டரின் ஃப்ரேம்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டாரானது 7kW திறன் கொண்டது ஆகும். 26 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும். இத்துடன் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 450 அபெக்ஸ்-இல் புதிய வ்ராப் பிளஸ் எனும் ரைடிங் மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட் வாயிலாக பயணிக்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடை நம்மால் அடைய முடியும். மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே 450 ஆகும். இதுமட்டுமில்லைங்க, வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் 450 அபெக்ஸ் கொண்டிருக்கின்றது.
இத்துடன் மற்றுமொரு சிறப்பம்சமாகவே மேஜிக் ட்விஸ்ட் வசதி 450 அபெக்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் புதிய அட்வான்ஸ்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். முழு எஞ்சின் ஹால்ட்டை இந்த தொழில்நுட்பம் மேற்கொள்ளும். ஆகையால், 100 சதவீதம் மின்சார விரையம் தவிர்க்கப்படுகின்றது.
எனவே, மிக சிறந்த ரேஞ்சை இதில் பெற்றுக் கொள்ள முடியும். ஏத்தர் எனெர்ஜி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 157 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. இதற்காக 3.7 kWh பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் வழங்கப்படவில்லை. அதேவேளையில், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது ஸ்டாண்டர்டு அம்சம் ஆகும். இத்துடன், இருசக்கர வாகனத்தை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டை வழங்கவும் ஏத்தர் திட்டமிட்டுள்ளது. இந்த ஹெல்மெட் ஸ்கூட்டரின் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.