கேப்டனை பாராட்டிய ஜாக்கிசான்.!.. காரணம் இதுதான்!.. உருகும் ஸ்டண்ட் இயக்குனர்…

விஜயகாந்த் படங்களில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்படும். அவரது படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்தவர்களில் ஒருவர் ஜாக்குவார் தங்கம். இவர் விஜயகாந்த் உடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

நடிகர் சங்கத்தின் கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் விஜயகாந்த். ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும்போது ஒருமுறை அவரது தோள் பட்டை கொஞ்சம் இறங்கி விட்டது. அன்று முதல் கையைப் பயன்படுத்தி அடிப்பது இல்லை. கால்களால் சுவரில் மிதித்து தாவித் தாவி அடிப்பார். ஜாக்கிஷானே இவரது சண்டைக்காட்சியைப் பார்த்து வியந்துள்ளார்.

சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது சண்டைக்கலைஞர்களின் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்வாராம். அவர்களைப் பார்த்து பார்த்துக் கவனிப்பார். கீழே விழுந்து விட்டால் ஒன்றும் ஆகல இல்ல… கையைக் காலத் தூக்கு, நீட்டுன்னு சொல்லி அவரது நலத்தில் அக்கறை காட்டுவார். அவருடன் வேலை பார்த்ததை மறக்கவே முடியாது.

என்னோட மகன் திருமணத்திற்கு அவரை அழைத்து இருந்தேன். அவரும் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் வரமுடியவில்லை. அதே நேரம் அவர் திருமணத்தன்று காலையிலேயே அண்ணியிடம் இன்னைக்கு தங்கப்பன் வீட்டு கல்யாணத்துக்குப் போகணுமனு சொன்னாராம்.

அவரால் நடக்க முடியாத நிலை. அதனால் தான் வர முடியவில்லை. நான் நேரில் சென்று பார்த்தேன். கண் கலங்கினார் விஜயகாந்த். அவர் எல்லாம் அழவே கூடாது. ஆனால் அவர் அழுததை என்னால் பார்க்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன்.

விஜயகாந்துக்கு முதலிலேயே தன்னோட மரணம் குறித்து தெரிந்துவிட்டது. அதனால் தான் பிரேமலதாவை முன்னரே பொதுச்செயலாளராக்கி விட்டார். நல்லவங்களுக்கு எல்லாம் 40 நாளுக்கு முன்பே தன்னோட இறப்பு குறித்து தெரிந்து விடுமாம். நானும் சித்தர் வழிபாட்டில் இருப்பதால் ஏதோ தவறுவதைப் போல உணர்ந்தேன்.

கடவுளுக்கு ஒரு நல்லவர் தேவைப்படுகிறார். அதனால் தான் அவரை அழைத்து இருக்கிறார். அவர் முதலில் போய் நமக்காக நல்லது செய்வார். அதன்பிறகு நாமும் தான் அங்கு போய் நல்லா இருப்போமே என தன் அனுதாபங்களைத் தெரிவிதுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *