சிஎஸ்கே அணியில் பெரிய வீக்னஸே ஜடேஜா தான்.. இந்த இடத்தில் பெரிய குறைக்கு கவனச்சீங்களா – ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான அணியாக கருதப்பட்டாலும், அதில் பல குறைகள் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை களமிறங்குகிறது.

ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணியில் இருக்கும் குறைகள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை சுழற் பந்து வீச்சில் கொஞ்சம் குறைகள் இருக்கிறது. ஏனென்றால் அவர்களிடம் தற்போது பெரிய இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜாவை தவிர, வேறு யாரும் இல்லை. பிளேயிங் லெவனில் ஜடேஜா மட்டும்தான் இடம்பெறுவார். இதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் கொஞ்சம் நெருக்கடி இருக்கும்.

வெளிநாட்டு வீரர்கள் சுழற் பந்துவீச்சை அதிகம் அளவு வீச கூடும். இதுதான் என்னுடைய கருத்து. இது சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயம் கிடையாது. அதேசமயம் ஜடேஜா தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பி இருக்கிறார். ஜடேஜா சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அதன்பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடக் கூடியவர்.

ஆனால் டி20 யை பொருத்தவரை ஜடேஜா கடைசியில் தான் வருவார். தோனியை பொருத்தவரை ஜடேஜாவிடமிருந்து சிறந்த ஒரு செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவார் என்று நம்புவோம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியில் சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா,மோயின் அலி, ரச்சின் ரவீந்திரா.

அஜய் மண்டல்,நிசான் சிந்து, பிரசாந்த் சோலங்கி, தீக்சனா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.சிஎஸ்கே எப்போதுமே ஜடேஜாவை தவிர வேறு எந்த இந்திய சுழற் பந்துவீச்சாளரையும் பிளேயிங் லெவனின் சேர்த்தது கிடையாது. இப்படி இருக்க இதை ஒரு குறையாக ஆகாஷ் சோப்ரா எந்த வகையில் கூறுகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் .

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *