ஹரியானாவை வீழ்த்திய ஜெய்ப்பூர்; உ.பி யோதாஸை வென்ற புனேரி பால்டன்

Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.

ஹரியானாவை வீழ்த்திய ஜெய்ப்பூர்

முதல் போட்டியில் ஹரியானா – ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹரியானா வீரர்கள் கடுமையாக போராடினாலும், ஜெய்ப்பூர் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக அர்ஜூன் தேஸ்வால் 14 புள்ளிகளையும் ரெசா மிர்பர்கிரி 7 புள்ளிகளையும் எடுத்தனர். ஹரியானா அணியில் அதிகபட்சமாக சந்திரன் ரஞ்சித் 11 புள்ளிகளை எடுத்தார்.

உ.பி யோதாஸை வென்ற புனேரி பால்டன்

இரண்டாவது போட்டியில் புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. பின்னர் புனே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியால், புனே அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி யோதாஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புனே அணியில் அதிகபட்சமாக அஸ்லாம் 11 புள்ளிகளையும், முகம்மதுரெசா 7 புள்ளிகளையும் எடுத்தனர்.உ.பி யோதாஸ் அணியில் அதிகபட்சமாக பர்தீப் நர்வால் மற்றும் சுமித் தலா 6 புள்ளிகளை எடுத்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *