200 அடித்தும் மீண்டும் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் இல்லை.. இதுக்கு முன் யாருக்கு இப்படி நடந்திருக்கு?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு போட்டிகளுமே அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை விட மற்ற வீரர்கள் ஏதேனும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் என்று விருது மாற்றி வழங்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் ஜடேஜா பேட்டிங்கில் சதம் பந்துவீச்சில் ஏழு விக்கெட் என அசத்தியிருக்கிறார். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்திருந்தும் ஜடேஜா தன்னுடைய ஆல்ரவுண்ட் திறமைக்காக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தும் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதில் கடினமான ஆடுகளத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார் என்று கூறி வழங்கப்பட்டது. இப்படி ஜெய்ஸ்வால் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை தவற விட்டு இருக்கிறார். எனினும் இந்திய கிரிக்கெட்டில் இதுபோல் நிகழ்ந்திருப்பது முதல் முறை அல்ல.

பல வீரர்களும் இரட்டை சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் வினோத் காம்ப்ளி. காம்ப்ளி இங்கிலாந்துக்கு எதிராக 1993 ஆம் ஆண்டு 224 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து வீரர் G Hick- ற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதே போன்று 2000 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்தார்.

ஆனால் ஆட்ட நாயகன் விருது ஸ்ரீநாத்துக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சச்சின் ஆட்டம் இழக்காமல் 248 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால் ஆட்டநாயகன் விருது இர்பான் பதானுக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று விராட் கோலி 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரட்டை சிதம் அடித்திருந்தார். ஆனால் ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி இந்தூர் டெஸ்டில் 211 ரன்கள் குவித்தார். ஆனால் மீண்டும் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்காமல் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாயங் அகர்வால் 215 ரன்கள் குவித்தார். ஆனால் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பட்டியலில் ஜெய்ஸ்வால் இரண்டு முறை இணைந்து இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *