பாஸ்பால் மெக்கலம் சாதனையை.. அவர் கண் முன்னாலே உடைத்த ஜெய்ஸ்வால்.. ரோகித் சாதனையும் காலி

இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நான்காவது நாளில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
நேற்று மூன்றாவது நாளின் முடிவுக்கு சில ஓவர்கள் இருந்த பொழுது சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக வெளியேறினார்.
இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கில் ரன் அவுட் ஆகி வெளியேற, அடுத்த விக்கெட்டுக்கு உடனடியாக ஜெய்ஸ்வால் அனுப்பப்பட்டார்.
எந்த இடத்தில் இருந்து ஜெய்ஸ்வால் நேற்று விட்டு இருந்தாரோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளைக்கு சென்று வந்ததும், அவருடைய ஆட்டத்தில் மேலும் உக்கிரம் கூடியது.
லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் விளாசி, அடுத்து அவருக்கு ஓவர் தருவதையே பென் ஸ்டோக்சை நிறுத்த வைத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடியவரின் பேட்டில் இருந்து சிக்ஸர்கள் வந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக மிகச் சிறப்பாக விளையாடிய அவர் தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.