ஜனவரி 23 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… முதல்வர் தொடங்கி வைப்பு !
தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டும் பாரம்பரியம் மிக்கது.
அந்த வகையில் நடப்பாண்டும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 23 அல்லது 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடைபெற்று முடிந்துள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஜனவரி 17ம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் , உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்படபங்கேற்றனர். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, “மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 அல்லது 24ம் தேதி முதல்வர்ஸ்டாலின் திறந்து வைப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.