ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு: 100 பேர் காணவில்லை
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 200 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
200 பேர் உயிரிழப்பு
2024 புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையின் முக்கிய தீவான ஹொன்சு-வின்(Honshu) நோட்டோ தீபகற்ப பகுதியில் 7.6 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கரமான நிலநடுக்கம் உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியது, பல கட்டிடங்களில் தீ விபத்தை ஏற்படுத்தியது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகளை நாசமாக்கியது.
Drone video shows the damage after a deadly 7.6 magnitude earthquake on Japan’s western coast. At least 55 people were killed. pic.twitter.com/gbWveRVQ09
— AccuWeather (@accuweather) January 2, 2024
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நிலநடுக்கத்தில் சிக்கி 200 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இன்னும் 100 பேர் வரை இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பிறகும் இன்னும் ஆயிரக்கணக்கான மீட்பு பணியாளர்கள் சேதமடைந்த சாலைகள்,மோசமான வானிலை ஆகியவற்றுடன் மீட்பு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள 3,500 பேரை மீட்கவும் தொடர்ந்து பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.