300 கிலோ எடையில் தயாரான ஜெயலலிதாவின் முழுஉருவ கேக் சிலை..!

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.மருத்துவர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் கலாம் உலக சாதனைக்காக 6.5 அடி உயரத்தில் 300 கிலோ எடை கொண்ட ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை கேக்காக வடிவமைத்துள்ளார். ‌இந்த கேக் வடிவில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ சிலை ஒரு வருடத்திற்கு உருகாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கலாம் சாதனைக்காக உருவாக்கப்பட்ட 300 கிலோ எடை கொண்ட கேக் வடிவிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை நேற்று மாநகர மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா எம் எஸ் பாண்டியன் அண்ணாதுரை பா.குமார், வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் அ.தி.மு.க.மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

மேலும் நரிமேடு சரவணா மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைப்பதோடு , ஒரு வருடத்திற்கு பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளை அ.தி.மு.க.மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாடு செய்துள்ளார். டாக்டர் சரவணன் உருவாக்கிய 300 கிலோ எடை கொண்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கேக் வடிவிலான திருவுருவச் சிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொது மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *