கேப்டன் நினைவிடத்தில் ஜெயம் ரவி கண்ணீர் அஞ்சலி…..!

மிழ் திரையுலகின் கேப்டனும் தேமுதிக கட்சியின் தலைவருமாகிய விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவரது உடல் சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் தொடங்கி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், உறவினர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது.

அவர் உயிரிழந்த நாளில் வர இயலாதவர்கள் தற்போது வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று நடிகர் சூர்யா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு கண்கலங்கி நின்றார். நடிகர் அருண் விஜய் இனி தன் படங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு என சூளுரை செய்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிகர் விஜயகாந்த்தின் சமாதிக்கு கண்கள் கலங்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் அவர் நடிகர் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். நிறைய நல்ல விஷயங்கள் செய்துள்ளார். நான் நடிக்க வந்தபோது என்னை கூப்பிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். எனக்கும் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்துள்ளார். அப்படி ஒரு நல்ல மனிதர் இப்போது இல்லையே என்பதில் மிகுந்த கவலை. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *