அமேசானின் பங்குகளை விற்கும் ஜெப் பெசோஸ்!

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு அவர் அளித்த அறிக்கையில், பிப்.7 மற்றும் பிப்.8 ஆகிய தேதிகளில் 1 கோடியே 19 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சியாட்டலை தலைமையிடமாக கொண்டுள்ள அமேசானின் நிகர மதிப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கேரேஜில் ஆரம்பித்த அமேசான் இன்று உலகம் முழுவதும் செயல்படும் விற்பனை நிறுவனம்.

மற்றொரு அறிக்கையில் பெசோஸ், 840 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமேசானின் 5 கோடி பங்குகளை விற்கவுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

பெசோஸ், 2021-ல் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அவரது மற்ற திட்டங்களான, ஏவுகணை நிறுவனம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *