2 பில்லியன் டாலர் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்! 2021க்குப் பின் முதல் முறை!
ஜெப் பெசோஸ் இந்த வாரம் அமேசான் (Amazon) நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், அவரது சொத்து மதிப்பு 199.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஜெப் பெசோஸ் இந்த வாரம் அமேசான் (Amazon) நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்குப் பின் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் இவ்வளவு பெரிய அளவில் விற்கப்பட்டது இதுவே முதல் முறை.
அமேசானின் மெகா பங்கு விற்பனை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்துள்ளது. 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிக்கத்தக்கது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெப் பெசோஸ் அடுத்த 12 மாதங்களில் அமேசானின் 50 மில்லியன் பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பங்கு விற்பனை ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு உதவக்கூடும் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு 22.6 பில்லியன் டாலர் உயர்ந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 199.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பெசோஸ் 2002 முதல் 30 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமேசான் பங்குகளை விற்றுள்ளார். இதில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 பில்லியன் டாலர் பங்குகளை விற்றார். நவம்பரில் லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை பரிசாக அளித்துள்ளார்.