சுமார் 2 பில்லியன் டாலர் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்! ஏன் தெரியுமா?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது நிறுவனப் பங்குகளை விற்றுள்ளார். இது ஒவ்வொன்றும் 168 டாலர் முதல் 171 டாலர் வரையிலான விலையில் விற்கப்பட்ட 12 மில்லியன் பங்குகளைக் குறிக்கிறது.
எல்விஎம்ஹெச் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, பெசோஸின் சொத்து மதிப்பு 195.5 பில்லியன் டாலர்களாக இருந்ததாக ஃபோர்ப்ஸ் சமீபத்திய அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 50 மில்லியன் பங்குகள் வரை விற்பனை செய்ய இருப்பதாக பெசோஸ் கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குகள் விற்பனை நடந்துள்ளது. நிறுவனத்தின் ஈக்விட்டியில் கணிசமான பகுதியை இன்னும் வைத்திருக்கிறார் எனவும் தெரிகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவிய நிறுவனத்தின் 50 மில்லியன் பங்குகளை அடுத்த ஆண்டு ஜூலையில் விற்க இருப்பதாக பிப்ரவரி 7 பங்குச் சந்தை ஆவணத்தில் அவரது திட்டம் அறிவிக்கப்பட்டது.
நிதியாண்டில் அமேசான் படைத்த விற்பனை சாதனைகளை தொடர்ந்து இந்த பங்குகள் விற்கப்பட்டுள்ளன. விரைவான டெலிவரிகள் மற்றும் அதிக விடுமுறை காலம் என்பதால், நிறுவனம் சமீபத்தில் 170 பில்லியன் டாலர்கள் விற்பனை செய்ததுடன், 10.6 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த நாள், இந்த செய்தியின் விளைவாக அமேசான் பங்கு விலை 13 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.