ஜிம்னி விற்பனையில் இருந்து வெளியேற்றம்! தார் எஸ்யூவிக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட காருக்கு இப்படி ஒரு நிலைமையா
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதன் சூப்பரான கார் மாடல் ஜிம்னி (Jimny)-யை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV)க்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த காரின் திடீர் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அமோக விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) இருக்கின்றது. இந்த காருக்கு வரவேற்பு அதிகம் என்பதால் காத்திருக்கும் காலமும் மிக மிக அதிகமாக நிலவுகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த காருக்கு காத்திருப்பு காலம் பல மாதங்களாக இருப்பாதகக் கூறப்படுகின்றது.
இத்தகைய பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் தார் எஸ்யூவி-க்கு போட்டி அளிக்கும் வகையில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் உள்ளது.
குறிப்பாக, இது ஓர் ஐந்து கதவுகள் அமைப்பைக் கொண்ட வாகனம் என்பதால் தார் காருக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வரவேற்பை அது பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னி தண்டர் எடிசன் (Maruti Suzuki Jimny Thunder Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனையே மாருதி சுஸுகி விற்பனையில் இருந்து தற்போது வெளியேற்றி இருக்கின்றது. ஆகையால், வழக்கமான மாருதி சுஸுகி ஜிம்னி எஸ்யூவி வழக்கம்போல் விற்பனைக்குக் கிடைக்கும்.
சந்தையில் எஸ்யூவி கார் பிரிவில் நிலவிக் கொண்டிருக்கும் கடும் போட்டிக்கு ஈடு கொடுக்கும் நோக்கில் மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்ததே தண்டர் எடிசன் ஆகும். இதன் விலை வழக்கமான ஜிம்னியைக் காட்டிலும் சற்று குறைவாகும். ரெண்டு லட்ச ரூபா வரை கம்மியான விலையிலேயே ஜிம்னி தண்டர் எடிசன் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.
இதனையே தற்போது விற்பனையில் இருந்து அதிரடியாக அகற்றி இருக்கின்றது மாருதி சுஸுகி நிறுவனம். ஆகையால், இனி இந்த வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கின்றது. மேலும், இதன் விற்பனை வெளியேற்றத்தினால், மாருதி சுஸுகி ஜிம்னியின் ஆரம்ப மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுஸுகி ஜிம்னி கார் ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த தண்டர் எடிசன் பதிப்பின்கீழ் மாருதி சுஸுகி நிறுவனம் ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு ட்ரிம்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தண்டர் எடிசன் கிட்டை இலவசமாக வழங்கியது.
ரூஃப் ரெயில், டெயில்கேட் மவுண்டட் ஸ்பேர் வீல் கவர், பம்பர் கார்னிஷ், ஸ்கிட் பிளேட், பக்கவாட்டு டோர் கிளாடிங், டோர் விசர்கள், டோர் சில் குவார்டுகள், ஓஆர்விஎம் கார்னிஷ், சைடு ஃபெண்டர் கார்னிஷ் உள்ளிட்டவற்றையே அது வழங்கியது. இந்த இலவசத்தையும் நிறுவனம் தற்போது பின் வாங்கி இருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியின் அனைத்து வேரியண்டுகளிலும் 4X4 தொழில்நுட்பத்தை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால், மஹிந்திராவில் இது ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது. அதேவேளையில், பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களும் தார் காரில் வழங்கப்படுகின்றன.
ஆனால், மாருதி சுஸுகியில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே ஜிம்னி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 134.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுகின்றது.