ஜியோ vs ஏர்டெல் vs விஐ: இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்களின் ஒப்பீடு இங்கே!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்றவை பல்வேறு சர்வதேச ரோமிங் ரீசார்ஜ் பிளான்களை தங்கள் யூஸர்களுக்காக வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் யூஸர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட நியாயமான விலையில் வாய்ஸ் கால்ஸ்களை செய்ய அல்லது பெற, மெசேஜ்களை அனுப்ப அல்லது பெற ரோமிங் ரீசார்ஜ் பிளான்கள் உதவுகின்றன.
இங்கே நாம் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான நிறுவனங்களின் சர்வதேச ரோமிங் பேக்ஸ் மிகவும் பிரபலமான வருடாந்திர சர்வதேச ரோமிங் பிளான்களை ஒப்பிட்டு பார்ப்போம்.
இன்டர்நேஷனல் ரோமிங் வருடாந்திர பேக்ஸ்:
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே வருடாந்திர இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்ஸ்களை வழங்குகின்றன. Vi நிறுவனம் இந்த பட்டியலில் இல்லை. ஜியோவின் இன்டர்நேஷனல் ரோமிங் பிளான் ரூ.2,799-க்கு கிடைக்கிறது. இந்த பிளானின் கீழ் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி, 100 மினிட்ஸ் அவுட்கோயிங் கால்ஸ் மற்றும் இன்கமிங் கால்ஸ், 2GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மறுபுறம் ஏர்டெல் நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி, 100 லோக்கல், ஹோம் மற்றும் இன்கமிங் மினிட்ஸ், 2GBடேட்டா மற்றும் 20 எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை ரூ.2,997-க்கு வழங்குகிறது. மேற்கண்ட 2 பிளானில் ஜியோவின் பிளான் செலவு குறைந்ததாக உள்ளது.
யூஎஸ்ஏ, மெக்சிகோ மற்றும் யூஎஸ் விர்ஜின் தீவுகளுக்கான (U.S. Virgin Islands) இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்:
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகீஐ 2 நிறுவனங்களும் 1 மாத கால வேலிடிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளன. ஜியோவின் ரூ.3,455 பிளான் 30 நாட்கள் வேலிடிட்டி, 250 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் கால்ஸ், 25GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. அதே நேரம் ஏர்டெல் நிறுவனம் 100 நிமிட லோக்கல் மற்றும் இந்தியாவுக்கான கால்ஸ்கள், மேலும் ஒரு நாளைக்கு 100 நிமிடங்களுக்கான இன்கமிங் கால்ஸ் 12GB டேட்டா மற்றும் 20 எஸ்எம்எஸ்-களை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.3,999-க்கு வழங்குகிறது. ஏர்டெல்லின் இந்த பிளானோடு ஒப்பிடும் போது 7 மடங்கு அதிக டேட்டா, குறைந்த விலை மற்றும் அன்லிமிட்டட் இன்கமிங் கால்ஸ்களை வழங்குவதன் மூலம் ஜியோ தனித்து நிற்கிறது.
ஒருவேளை நீங்கள் 30-நாள் பிளானை ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால், ரூ.2,555 என்ற விலையில் 21 நாள் வேலிடிட்டி கொண்ட பிளானை ஜியோ வழங்குகிறது. இந்த பிளான் 250 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் கால்ஸ், 15GB டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் இன்கமிங் கால்ஸ்களை வழங்குகிறது. அதே நேரம் ஏர்டெல் ரூ.2,998 என்ற விலையில் 200 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்ஸ் (லோக்கல் கால்ஸ்+இந்தியாவிற்கான கால்ஸ்+இன்கமிங் கால்ஸ்), 5GB டேட்டா மற்றும் 20 எஸ்எம்எஸ்களை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
Vi நிறுவனம் 7 நாள் வேலிடிட்டி, 7GB டேட்டா, 120 நிமிட வாய்ஸ் கால்ஸ், இலவச இன்கமிங் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.15 என எஸ்எம்எஸ் சர்விஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
UAE-க்கு மட்டுமான இன்டர்நேஷனல் ரோமிங் பேக்:
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்ஸ்களை பொறுத்தவரை, ஜியோ நிறுவனம் ரூ.898 விலையில் 7 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் கால்ஸ், 100 இன்கமிங் கால் மினிட்ஸ், 1GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் ரூ.899 விலையில் 7 நாட்கள் வேலிடிட்டி, 1GB டேட்டா மற்றும் 20 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. Vi நிறுவனம் ரூ.1198 என்ற விலையில் 20 நாட்கள் வேலிடிட்டியுடன், 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளானில் எஸ்எம்எஸ் பெனிஃபிட்ஸ் இல்லை.
இதை விட அதிக நன்மைகளுடன் கூடிய பிளான் என்று பார்த்தால் ஜியோவின் ரூ.1,598 பிளானானது 150 மினிட்ஸ் இன்கமிங் கால்ஸ், 150 நிமிட இன்கமிங் கால்ஸ், 3GB டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் 14 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதே நேரம் ஏர்டெல் நிறுவனம் கிட்டத்தட்ட இதே நன்மைகளுடன் கூடிய பிளானை ரூ.2,998-க்கு கொடுக்கிறது. இதில் லோக்கல் கால்ஸ் உட்பட 200 நிமிட வாய்ஸ் கால்ஸ் (இந்தியாவுக்கான கால்ஸ் மற்றும் இன்கமிங் கால்ஸ்), 5GB டேட்டா, 20 எஸ்எம்எஸ், 30 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. Vi நிறுவனத்தின் ரூ.2,388 விலையிலான பிளான் 300 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் கால்ஸ், 4GB டேட்டா மற்றும் 40 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனால் இதில் SMS நன்மைகள் இல்லை.