இந்திய விமானப்படையில் அக்னி வீரர் வாயு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு..!
இந்திய விமானப்படையில் அக்னி வீரர் வாயு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் 2.1.2004 முதல் 2.6. 2007 என்ற இரண்டு தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். தற்போது அதிகபட்சமாக 21 வயது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 12 அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியுடன் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜனவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி6ம் தேதிக்குள் இணைய வழியிலான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்பகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற முறைகளில் தேர்வு செய்யப்படுபவார்கள்.பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதல் வருடம் மாதம் தோறும் ரூபாய் 30,000 ஊதியம் பெறுவார்கள், நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூபாய் 10.04 லட்சம் வரை ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காண்டுகள் பணியை முடித்த பிறகு 25 சதவீதம் அக்னி வீரர்கள் இந்திய விமானப்படையில் இணைவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 17/ 01/ 2024 முதல் 06/02/ 2024 வரை
கல்விதகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடநெறிகளுடன் 10+2 அல்லது அதற்கு சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.