செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு… நாடு முழுவதும் 1,930 காலிப்பணியிடங்கள்… விண்ணப்பிப்பது எப்படி..?

ஊழியர்களின் மாநில காப்பீடு கார்ப்பரேஷனில் நாடு முழுவதும் காலியாகவுள்ள 1,930 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள் :

பொது பிரிவில் 892, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 193, ஓபிசி பிரிவில் 446, எஸ்சி பிரிவில் 235 மற்றும் எஸ்டி பிரிவில் 164 மற்றும் PwBD பிரிவில் 168 என மொத்தம் 1,930 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இப்பணியிடங்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு படி, லெவல் 7 (9,300-34,800) சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவில் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 33 ஆகவும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 35 ஆகவும், PwBD பிரிவினருக்கு 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நர்சிங்கில் B.Sc., (Hons) அல்லது B.Sc.,நர்சிங் அல்லது Post Basic B.Sc., நர்சிங் முடித்திருக்க வேண்டும். செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.

அல்லது General Nursing Mid- Wifery படிப்பில் டிப்ளமோ பெற்று செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், ஒரு ஆண்டு அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் https://upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் 27.03.2024 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 80 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும். 07.07.2024 அன்று இப்பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *